Tuesday, January 15, 2013

Sivalaya Marathon

சிதம்பரம் நடராஜர் கோவிலின் வாசலில் காவல் தெயவமாக் வழிபடும், இந்த வினோதமான மிருகத்தின் பெயர் “புருஷமிருகம். எகிப்திய வழிபாட்டில் உள்ள “ஸ்பின்க்ஸ் (sphinx) , பெண் புருஷமிருகம் என்று அழைக்கப்படும். 
த்ரிபுவனத்தில் உள்ள வரதராஜர் பெருமாள் கோவிலின் சுவர்களில் இந்த பெண் புருஷமிருக சிலை உள்ளது


மேலே சொன்ன செய்தியான புருஷ ம்ருகத்திற்கும், சிவாலய ஒட்டத்திற்கும் என்ன சம்பந்தம். முதலில் சிவாலய ஓட்டம் என்ன என்று பார்ப்போம்.
மாரதான் ஓட்டம் பற்றி கேட்டுள்ளோம். அதன் இலக்கு 45 கிலோ மீட்டர் தூரம் தான். 
சிவாலய ஓட்டம் பற்றி கேட்டுள்ளீர்களா. அது 100 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். சிவராத்ரி பண்டிகையின் போது குமரி மாவட்டத்தில் உள்ள திருநட்டா சிவத்தலத்தில் தொடங்கி, திருமலை மகாதேவர், திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திகரை, பொன்மனை தீம்பிலாங்குடி, திருபன்றிபாகம், கல்குளம்நீலகண்ட ஸ்வாமி, மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்னிக்கோடு, திருநட்டாலம் சங்கரநாராயணன் கோவில் வரை ஓடி வலம் வருவர். பதினோரு சிவத்தலத்தில் திருநீறு தருவர். திருநட்டாலத்தில் சந்தனம் வழங்கப்படும். 
இந்த ஓட்டம் மூன்று தத்துவங்களைச் சொல்கின்றது. 1. அகந்தை கூடாது. 2. ஹரியும் ஹரனும் ஒன்று, 3. நீதி அனைவருக்கும் சமம். இன்றய காலகட்ட்த்தில் இந்த மூன்றையும் அநேகமாக பலரும் மதிப்பதில்லை. மகாபாரத்தின் ஒரு நிகழ்வு, இந்த செய்தியின் பின்னணியாக உள்ளது.
தருமபுத்திரர் செய்த யாகத்திற்கு, மனிதன் தலையும் புலியின் உடலும் கொண்ட புருஷ ம்ருகத்தின் பால் தேவைப்பட்டது.
புருஷ ம்ருகம் மனிதத் தலையும் புலியின் உடலமைப்பையும் உடையது. அதனைப் பிடித்துவர பீமன் காட்டிற்குக் சென்றான். புருஷ ம்ருகம் ஒரு சிவபக்தை. தனது எல்லைக்குள் வருபவர் எவரானாலும் அவர்களைக் கொன்று தின்ன சிவபிரான் அதற்கு வரம் அளித்திருந்தார். பீமன், புருஷம்ருகம் இருவரது “நான் என்ற கர்வத்தை அடக்க க்ருஷ்ணபிரான் ஒரு யுக்தியைக் கையாண்டார். பீமனிடம் 12 சிவ லிங்கங்களை கொடுத்து அனுப்பினார். “என்னிடம் அகப்படாமல் என்னைத் தாண்டிச் சென்றால் உனக்கு வேண்டியதை தருவதாக ம்ருகம் ஒத்துக் கொண்டது. ஒவ்வொரு தடவையும் பீமன் அந்த ம்ருகத்திடம் பிடிபடும் பொழுதும் ஒரு லிங்கத்தை அங்கே வைக்க, புருஷ ம்ருகம் அங்கே சிவ பூஜையைத் தொடங்கும். பீமனும் அதன் எல்லையை தாண்ட, ஒட வேண்டும். இவ்வாறு பன்னிரண்டு தடவை ஓடி எல்லையை விட்டு வெளியே வர யத்தனித்தான். பன்னிரண்டாவது தடவை எல்லைக் கோட்டிற்குள் அவனது கால் இருந்த்தால், அந்த ம்ருகம் பீமனை பிடித்தது. பீமன் அதன் எல்லையை தாண்டியதாக வாதிட்டான். அதனை நிரூபணம் செய்ய தருமபுத்திரரை அழைத்தது. தருமரும் பீமன் தோற்றதாக உண்மையை உரைத்ததால், மகிழ்ந்து பீமனை விட்ட்து. வேண்டியதை அளித்தது. பீமனின் செருக்கும் அகன்றது. ம்ருகத்தின் வீர்யம் அழிந்து சிவனடி அடைந்தது. பீமன் வைத்த 12 சிவலிங்கங்களே இன்றும் பூஜிக்கப் படுகிறது. அவன் ஓடிய ஓட்டம் தான் இன்றும் சிவாலய ஓட்டமாக கொண்டாடப் படுகிறது.

No comments:

Post a Comment